Pages

Thursday, March 13, 2014

பருக்கள் வராமல் தடுக்கும் வழிகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறதுஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்னைகளில் ஒன்று தான் இந்த முகப்பரு. அதிலும் பருவ வயதை எட்டிய இளம்  வயதினருக்கு ஏற்படும் இந்த பருக்களானது அவர்களின் தன்னம்பிக்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. இத்தகைய பருக்களை போக்க எளிய  வழிகளை பார்க்கலாம்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும்பருக்கள் நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில்  உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் போய்விடும்.

தக்காளி: தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக்  கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்களுடன், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

வாழைப்பழ தோல்: வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும்  மற்ற சரும பிரச்னைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும் புள்ளிகளில் இருந்து விடை பெறலாம்.

தண்ணீர் குடிக்கவும்: சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும்  தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.

No comments:

Post a Comment