Pages

Friday, September 18, 2015

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
 யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர்   எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
இது நாங்க சொல்லலைங்க ..!
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!

Wednesday, September 16, 2015

இண்டர் நெட் ஸ்பீடை ஐ தரம் பிரிக்கும் 2 G ,3G,4G பற்றி தெரியுமா.?

இண்டர் நெட் ஸ்பீடை ஐ தரம் பிரிக்கும் 2 G ,3G,4G பற்றி தெரியுமா.? ஏன் ..?எப்போது,.?எப்படி செயல்படுகிறது.?
மொபைல் தொழில்நுட்பம் புதிய
தலைமுறைக்கு ஏற்றவாறு வளர்ந்து கொண்டே
உள்ளது.மொபைல் இல்லாத
ஒருவரை பார்க்கவே அரிதாக இருக்கும்
அளவுக்கு மொபைல்-ம் அதன்
தொழில்நுட்பமும் வளர்த்துள்ளது.மொபைல்
தொழில்நுட்பத்தின் ஆரம்பம் மற்றும்
பின்வந்த ஒவ்வொரு தலைமுறையிலும்
என்னென்ன வசதிகள் மேம்படுத்தப்பட்டன என
பார்ப்போம்.
1ஜி(1G) (First Generation):(1981)
1ஜி என்பது முதல்
தலைமுறை தொழில்நுட்பம். 1G
ஒரு அனலாக் சிக்னல் .1G-ல் அனலாக்
டிரான்ஸ்மிஷன்(analogTransmission) நுட்பம் குரல்
சமிக்ஞைகளை(Voice Signals) கடத்த
பயன்பட்டது. இதில் AMPS(Advanced
Mobile Phone System) ,Total
Access Communication System
(TACS & Extended
TACS ,Narrowband
TACS,Japanese TACS),Nordic
Access Communications
(NMT)450 & 900), C-NETZ,
Radiocom2000, Radio
Telephone Mobile System
(RTMS), Nippon Telephone &
Telegraph என்று வெவ்வேறு
தரங்களில்பயன்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு தரத்திலும் அதிர்வெண் பண்பேற்றம்
(frequency modulation) நுட்பம்
குரல் சமிக்ஞைகளுக்கு பயன்படுத்தினர்.மிகக்குறைந்த அளவே அலைக்கற்றை வேகம்
இருக்கும்.இதில் தரவு பாதுகாப்பு (Data Security)
மற்றும் மறையாக்கம்(encryption)
எதுவும் இல்லாததால் யார்
வேண்டுமானாலும் உரையாடலை எளிதில்
பிழைகளை பயன்படுத்தி கேட்டு விட
முடியும்.அது மட்டுமில்லாமல் குறைவான
குரல் தரம் மற்றும் தேவையல்லாத
தலையிடுதல்கள் ஏற்படும்.
2ஜி(2G) (second Generation):(1991)
1ஜி க்கு பிறகு வந்தது தான்
2ஜி தொழில்நுட்பம். 2G ஒரு Digital
Signal. 2G ஆனது TDMA(Time
Division Multiple Access)
அல்லது CDMA(Code Division
Multiple Access) முறையில்
இயங்கியது. இந்த தொழில்நுட்பம் GSM
(Global System For Mobile
Communication) என்று அழைக்கப்
படுகிறது.
Digital Signal-பலமான
பிணைப்பு தேவை எனவே குறைவான
சமிக்ஞைகள் உள்ள இடத்தில்
பிணைப்பை ஏற்படுத்துவது கடினமாகிறது
.2ஜி தொழில்நுட்பம் பேசும் வசதி,
எஸ்.எம்.எஸ் வசதி(சம்ஸ்), புகைப்படம்
அனுப்புதல், எம்.எம்.எஸ்(MMS) போன்ற
வசதிகளைக் கொண்டது. 1G
தொழில்நுட்பத்தை விட சிறந்த குரல் தரம் நிலையானதாக இருந்தது.
பின் அறிமுகமான
(1997)GPRS, 2.5 G
என்று அழைக்கப்படுகிறது.GPRS-ல்
இணையம்(WEB) 144 kbps
வரை வேகமாக இருந்தது.GPRS
Wireless Application Protocol
(WAP)-ல் இயங்குகிறது..பின் EDGE
(Enhanced Data for Global
Evolution or EGPRS)(1999)-ல்
அறிமுகப்படுத்தப்பட்டது.இது 2.75G
என்று அழைக்கப்படுகிறது.
3ஜி(3G) (Third Generation):(2001)
2ஜி க்கு பிறகு வந்தது தான்
3ஜி தொழில்நுட்பம் மூன்றாம்
தலைமுறை தொழில்நுட்பமாகும். வேகம்
144 kbps ல் இருந்து 2 mbps
வரை அதிகப்படுத்தப்பட்டது.இது UMTS
(Universal Mobile
Telecommunication Syatem))
என்று அழைக்கப் படுகிறது.
HSPA, 3.5G என்று அழைக்கப்படுகிறது .இதன் மூலம் மேலும் இணைய வேகம் அதிகப்படுத்தப்பட்டது. HSPA
ஆனது HSDPA மற்றும் HSUPA
நெறிமுறையை(protocol)
உள்ளடக்கியது. பின் HSPA
+(42MBPS) Protocol 3ஜி யின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.3G-தொழில் நுட்பத்தில் குரல் தரம் (Voice
Signals),அதிக பாதுகாப்பு,
தனியுரிமை பாதுகாப்பு, மற்றும்
வீடியோ அழைப்பு (Video Calling),
மொபைல் டிவி போன்றவற்றை பெற முடியும்.
4ஜி(4G)(Fourth Generation):
(2011)இது LTE-(Long Term
Evolution) என்று அழைக்கப்
படுகிறது.4G ஆனது 3G -யை விட
வேகம் அதிகமானது. தற்போது மிகப்
பெரிய நகரங்கள் மற்றும் விமான
நிலையங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.4G இணையத்திற்காகவே மேம்படுத்தப்பட்டது.4G-ன் வேகம் அதிக இயக்க தொடர்பில்(High Mobility) அதிகபட்சம் 100Mbps download-50Mbps upload வேகத்தில்
தரவுகளை (data) பெறவும் மற்றும்
குறைந்த இயக்க தொடர்பில் (Low
Mobility) 1Gbps-ல் தரவுகளை பெற
முடியும்..இது MIMO(Multiple In
Muultiple Out ) தொழில்நுட்பத்தில்
செயல்படுகிறது.