Pages

Tuesday, April 19, 2016

சமையல் 'காஸ்' சிலிண்டருடன் ரூ.5 லட்சத்துக்கு இலவச இன்சூரன்ஸ்

சமையல் காஸ் சிலிண்டர் வாங்கும் நுகர்வோருக்கு, அதனுடன், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'இன்சூரன்ஸ்' திட்டம் இலவசமாக வழங்கப்படுகிறது.
உயிரிழக்க நேரிட்டால்...நம் வாழ்வில் எதிர்கொள்ளும் பல்வேறு ஆபத்துக்களுக்கு, இன்சூரன்ஸ் திட்டங்களை, குறிப்பிட்ட, 'பிரீமியம்' தொகை செலுத்தி பெற முடியும். ஆனால், சில இன்சூரன்ஸ் திட்டங்கள், நமக்கு இலவசமாக கிடைக்கின்றன. எல்.பி.ஜி., 
எனப்படும், சமையல் காஸ் சிலிண்டர் அல்லது பைப் மூலம் கிடைக்கும் சமையல் காஸ் போன்றவற்றை வாங்கும் நுகர்வோர், விபத்தில் உயிரிழக்க நேரிட்டால், ஐந்து லட்சம் ரூபாய் வரைகிடைக்கும் வகையில், இன்சூரன்ஸ் இலவசமாக செய்யப்படுகிறது.

மேலும், விபத்தில் காயம் அடைந்தால், ஒரு நபருக்கு, அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் என, ஒரு விபத்துக்கு அதிகபட்சம், 15 லட்சம் ரூபாய் வரை, மருத்துவ செலவுகளுக்கு, இன்சூரன்ஸ் தொகையை பெறலாம். சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங் கள், இதற்கான பிரீமியம் தொகையை செலுத்தி விடுகின்றன.

வங்கியிலும்...வங்கியில் முதலீடு செய்யப்படும் தொகை, அதன் மீதான வட்டி ஆகியவற்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை,இன்சூரன்ஸ் கிடைக்கும். சம்பந்தப்பட்ட வங்கிகள், தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில், இன்சூரன்ஸ் நிறுவனம், ஒருலட்சம்ரூபாய் வரை இழப்பீடுவழங்கும். 

மேலும், விமானப் பயணிகள் வாங்கும் டிக்கெட் மீது, இலவச இன்சூரன்ஸ் திட்டம் வழங்கப்படு கிறது. பயணி, விபத்தில் இறந்தால், 20 லட்சம் ரூபாய் வரையும், காயம் ஏற்பட் டாலோ, எடுத்துச் செல்லும் பொருள் தொலைந்து விட்டாலோ, 20,000 ரூபாய் வரை, இன்சூரன்ஸ் தொகையாக பெறலாம்.