Pages

Saturday, February 23, 2013

பாட்டி வைத்தியம் ...


·         நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

·         தொண்டை கரகரப்புசுக்குபால் மிளகுதிப்பிலிஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

·         புண் சிரங்கு குணமாக நுனா இலையை அரைத்து பற்றுப் போட குணமாகும்

·         தேமல் குணமாக ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து
  தினமும் தேய்த்து குளித்துவர தேமல் குணமாகும்.

·         கோரைக்கிழங்கு கஷாயம் வைத்து சாப்பிட எவ்வித காய்ச்சலும் குணமாகும்.

·         ஜலதோஷம் நீங்க துளசிச் சாறு இஞ்சி சம அளவு கலந்து குடிக்கலாம்

·         அத்திப்பழம் தினம் தோறும் ஐந்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

·         இருமல் குணமாக வெந்தயக்கீரை சமைத்து உண்டு வந்தால் குணமாகும்.

·         வெட்டுக்காயம் குணமாக இலந்தை மர இலையை அரைத்து காயத்தின் மீது பூசி வர குணமாகும்.

·         தொடர் விக்கல்லுக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்துதேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

·         வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

·         உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கிஅதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

·         அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலைஇஞ்சிசீரகம்மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

·         குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

·         வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

·         வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

·         வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர வாய்திக்கல் குணமாகும்.

·         வாத நோய் தீர ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டி வர குணமாகும்.

·         அகத்திக் கீரை வாரம் ஒருநாள்  சமைத்து உண்டுவர  மலச்சிக்கல் குணமாகும்நோய் குணமாகும். இந்த நாட்களில் மாமிசம் புளி காரம் சேர்க்க கூடாது
.
·         காய்ச்சிய வெப்பெண்ணையை தடவி வர சேற்றுப் புண் குணமாகும்

·         நாக்கு பூச்சி நீங்க குப்பைமேனி வேர் பொடி கஷாயம் செய்து சாப்பிடலாம்.

·         தான்றிக்காய் பொடி கால் ஸ்பூன் தேனில் கலந்து காலையில் சாப்பிட்டுவர கண்பார்வை நன்றாக தெரியும்.

·         இஞ்சி சாறுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட ரத்தம் சுத்தமாகும்.

·         பூவரசு இலைகளை அரைத்து வதக்கி கட்ட வீக்கம் குணமாகும்.

·         கசகசா கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர தூக்கம் நன்கு வரும்.

·         மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்துதினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

·         சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

·         பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

·         மூச்சுப்பிடிப்புக்கு சூடம்சுக்குசாம்பிராணிபெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

·         சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

·         சிலந்திகடி குணமாக கடிவாயில் கற்றாழை வைத்துக் கட்ட குணமாகும்.

·         பாம்புக் கடி விஷம் குறைய ஆடு தின்னாப் பாலை வேர் எடுத்து கஷாயம் செய்து குடித்தால் விஷம் முறியும்.

·         பூரான் கடிக்கு குப்பை மேனி உப்பு மஞ்சள் அரைத்து பற்று போட குணமாகும்.

·         நாய்க்கடி விஷம் முறிய ஊமத்தை இலையை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி கட்ட முறியும்.

·         தேள் கடிக்கு நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொள்ள விஷம் குறையும்.

·         சீதபேதி குணமாக கசகசாவை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மூன்று நாட்களில் குணமாகும்.

·         முள்ளங்கிச் சாறு சாப்பிட தலைவலி, ஜலதோஷம் , இருமல் குணமாகும்.

·         அகத்தி இலை அவித்த தண்ணீர் பருகினால் வாய்ப்புண் குணமாகும்.

·         தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.

·         வல்லாரை இலையுடன் தூதுவளை சேர்த்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர நுரையீரலில் உள்ள சளி நீங்கும்.

·         தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண்சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

·         மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சிபால்சர்க்கரை சேர்த்துக் காலைமாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

·         வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறுதேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

·         நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்துமுளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

·         பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்துநன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

·         உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால்
·         உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

·         தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.







No comments:

Post a Comment