Friday, April 19, 2013
விவேகானந்தர் பொன்மொழிகள்
1.
விருப்பங்களுக்கும், கோபத்திற்கும் அடிமையாய் இருப்பவனால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை உணரமுடியாது.
2.
எந்தச்சூழலிலும் இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
3.
உங்களுக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன என நம்புங்கள்.
5. பொறுமை தான் அனைத்து பணிகளையும் செய்து முடித்து வெற்றி பெற ஆணிவேராக இருக்கும்.பொறுமையுடன் உற்சாகத்தையும் கூட்டிவிட்டால்,வெற்றியின் எல்லைக்கு விளிம்பே கிடையாது.
6.
கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடவும் அறிவான்.முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள், ஒன்றாகக்கூடி வாழ்தலே நமக்கு வேண்டிய ஒன்றாகும்.சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமை. கீழ்ப்படிவதே அதன்ரகசியம்.
7.
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
8.
நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.
9. மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும்வழிபடுங்கள். பகவானை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.
10.
இரக்கத்தால் மனிதனுக்கு மட்டுமல்ல,அனைத்து உயிர்களுக்கும் பணி செய்தல் நன்மை தரும்.
11.
மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள் உங்களது சொந்த, உறுதியான முடிவில் பிடிப்புடன் இருங்கள்.
12.
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்
13.
ரகசியமாகப் பிறரைக் குறை கூறுவது பாவம்.முதலில் நீ அதை முழுவதும் நீக்க வேண்டும்,மன்னித்து மறந்தால் மகிழ்ச்சி நிலவும்.
14.
எந்த வேலையையும் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றுபவன் அறிவாளி.
15.
மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்..
16.
நீ உன் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் அதைப் பற்றிய எண்ணம் உன் உடல் முழுவதும் பரவி இருக்க வேண்டும்.
_ விவேகானந்தர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment