மத்திய தேர்வாணையத்தால்(UPSC)
நடத்தப்படும், சமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் IAS, IPS போன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படுகிறது.இந்த ஆண்டிற்கான(2013) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான
தேதி மே-26,2013 அன்று நடைபெறும் என்று அறிவிக்கபட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு மார்ச்மாதம் 05 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு கட்டணம்
சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். http://upsconline.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்து அனுப்ப வேண்டும்.
பெண்கள், SC, ST, உடல் ஊனமுற்றோர் தவிர்த்து, மற்ற அனைவரும் தேர்வுக்கட்டணமாக ரூபாய் 50 செலுத்த வேண்டும்.
சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு தேவையான கல்வி தகுதி மற்றும் பிறவற்றை பற்றி தெளிவாக அறிந்து கொள்வது அவசியம்.
கல்வித் தகுதி :
* அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறைந்தபட்ச தகுதி இளநிலைப் பட்டம்).
* இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத் தொகுதியின் ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை எழுதலாம்.
* ஆனால், Main தேர்வு எழுத செல்லும் முன்பாக, இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை காண்பிக்க வேண்டும்.
* அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை (professional) மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதியை வைத்துள்ளவர்களும், இந்தத் தேர்வை எழுதலாம்.
தேசிய அடையாள தகுதி :
* இந்திய குடிமக்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாக முடியும்.
* மேலும், கடந்த, 1 ஜனவரி, 1962ம் ஆண்டிற்கு முன்பாக, நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்தவர்கள் மற்றும் பர்மா, எத்தியோபியா, கென்யா, மாலவி, பாகிஸ்தான், இலங்கை, உகாண்டா, தான்சானியா, வியட்நாம், சையர் மற்றும் சாம்பியா போன்ற நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன் குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, IAS மற்றும் IPS ஆகலாம்.
வயது தகுதி :
* சிவில் சர்வீஸ் தேர்வெழுதுபவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
* பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 30 வயது வரை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.
* OBC பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 33 வயது வரை முயற்சி செய்யும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 35 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.
* மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.
தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் :
* பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.
* இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச்(OBC) சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 7 முறை முயற்சி செய்யலாம்.
* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 35 வயது வரை, எத்தனைமுறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.

தகவலுக்கு நன்றி
கல்வி வழிகாட்டி
No comments:
Post a Comment