Pages

Tuesday, March 12, 2013

கார்களை பராமரிப்பது எப்படி


கார் வாங்கும் போது எவ்வளவு முக்கியம் கொடுத்து வாங்குகிறமோ, அதை விட அதை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லை எனில் சில ஆண்டுகளிலேயே உங்களது கார் இருக்கும் இடம் பழைய இரும்புக்கடை தான். எனவே, கார் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். என்ன செய்யலாம்...
* பெரும்பாலானோர் நேரம் இன்மையாலும், சோம்பேறித்தனத்தாலும் காரை சுத்தம் செய்வதில்லை. இவ்வாறு காரை அவ்வப்போது சுத்தம் செய்யாவிடில் ஏற்படும் பாதிப்பை போல, அதில் உள்ள சுகாதாரமின்மையால், நமக்கும் உடல்நலக் கோளாறு ஏற்பம் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*
கார் ஸ்டியரிங்கில் அழுக்கு தேங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதில் பாக்டீரியா கிருமிகள் ஆக்கிரமித்திருக்கும், இதை சுத்தம் செய்யாமல் நாம் கார் ஓட்டினால் நமக்கு அக்கிருமிகளால் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. கிளவுஸ் அணிந்து கார் ஓட்டுவது நல்லது.
*
சரியான இடைவெளியில் ஆயில் மாற்ற வேண்டும். இதனால் உங்களது இன்ஜின் ஆயுள் காலம் நீடிக்கும்.
*
குறைந்தது வார விடுமுறை அன்றாவது, காரை சுத்தமாக கழுவ வேண்டும். காரின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் கார் "பளிச்' என்று இருக்கும். விற்பனை விலையையும் தக்க வைத்துக்கொள்ளலாம்.
*
காரில் ஏதாவது பழுதான பொருளை மாற்ற நினைத்தால், முடிந்தளவு ஒரிஜினல் பொருட்களையே மாற்ற வேண்டும். விலை குறைவாக இருப்பதற்காக, போலியான பொருட்களை வாங்கக் கூடாது. இதனால் காரின் தரம் குறையும்.
*
காரை குறிப்பிட்ட இடைவெளியில் ஓட்டிக்கொண்டிருக்க வேண்டும். மாதக்கணக்கில் ஓட்டாமல் வைத்திருக்கக் கூடாது.
*
காரில் எலக்ட்ரானிக் சம்பந்தமான பொருட்கள் வைத்திருந்தால், அதை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடினால் நல்லது. ஏனெனில் தண்ணீர் படாமலும், அழுக்காவதிலிருந்தும் பாதுகாக்கலாம்.
*
காரில் "ஏசி' இருந்தால், அது சரியான டிகிரி அளவில் செயல்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் அது காரின் பேட்டரி வாழ்நாளை பாதிக்கக் கூடும்.
*
காரின் ரேடியேட்டரை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்

No comments:

Post a Comment