Pages

Friday, July 19, 2019

வளர்ச்சிக்கு இன்ஜினியர்களே அடிப்படை!





20 ஆண்டுகளுக்கு முன் நாம் பயன்படுத்திய தொழில்நுட்பங்களையும், இன்று நாம் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களையும் சற்றி சிந்தித்து பார்த்தாலே போதும், இன்ஜினியரிங் துறையின் முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்!

நாட்டின் அதிவேக வளர்ச்சிக்கு தொழில்நுட்பமும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுதிபடைத்த இன்ஜினியரிகளும் அவசியம். நாட்டின் வளர்ச்சிக்கு இன்ஜினியர்கள் தான் அடிப்படை என்பதை நாம் புரிந்து செயல்பட்டால், விரைவில் அமெரிக்கா போன்ற, வளர்ந்த நாடாக இந்தியா உலக அரங்கில் தடம்பதிக்கும்.

ஒருவேலை, இன்ஜினியர்களே இல்லை என்றால் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை நம்மால் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க முடியாது. சரி தற்போது தொழில்நுட்பங்கள் முழுவதுமாக வளர்ச்சி அடைந்துவிட்டதா? என்றால், இல்லை என்பதே பதில். தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை நாம் போதும் என்று எண்ணுவதில்லை. இன்னும் புதிய புதிய தொழில்நுட்பங்களை எதிர்பார்க்கிறோம். புதிய ரோபோக்கள், புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள், பேட்டரியால் இயங்கும் கார்கள் என கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், சிவில் என அனைத்து இன்ஜினியரிங் துறைகளிலும் புத்தாக்க தொழில்நுட்பங்களை எதிர்பார்க்கிறோம். 

இன்ஜினியர்கள் இல்லை என்றால் வருங்காலத்திலாவது புதிய தொழில்நுட்பங்களை எதிர்பார்க்க முடியுமா? என்றால் அதுவும் நிச்சயம் முடியாது. இத்தகைய சூழலில், இன்ஜினியரிங் படிப்பிற்கான வாய்ப்புகள் குறைவு என்று எப்படி சொல்ல முடியும்? இன்ஜினியரிங் என்றால் என்னவென்றே தெரியாதவர்களும், புரியாதவர்களும் தான், இன்ஜினியரிங் துறையில் வாய்ப்புகள் குறைவு என்று சொல்வார்கள். 

மாற்றம் வேண்டும்

வரும் 2030ம் ஆண்டுகளில் ’சஸ்டெயினபில் டெவலப்மெண்ட் கோல்ஸ்’ என 17 குறிக்கோள்களை யுனெஸ்கோ வரையறுத்துள்ளது. அதனை அடைவதுற்கு 8 முக்கிய திறன்களை இன்ஜினியர்கள் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய திறன்களை மாணவர்கள் பெறும் வகையிலான பாடத்திட்டத்தை தான் நாங்கள் வழங்குகிறோம். இத்தகைய தரமான பாடத்திட்டத்தை அனைத்து கல்வி நிறுவனங்களும் பயன்படுத்த வேண்டும். 

இன்று, ஆன்லைனிலேயே உலகத்தரம் வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் உரையாடல்களை யார்வேண்டுமானாலும் கேட்க முடியும் என்ற சூழல் உள்ள நிலையில், பேராசிரியர் ஒருபுறம் பாடம் நடத்திக்கொண்டும், மறுபுறம் மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருப்பதுமான வகுப்பறைகள் இனியும் இருக்கக்கூடாது. வகுப்பறையில் மாணவர்கள் அதிகளவில் கலந்துரையாட வேண்டும். பல்வேறு அம்சங்களை அலசி ஆராய வேண்டும். பேராசிரியர்கள் என்பவர்கள் உறுதுணையாகவும், மாணவர்களுடன் தோழமையுடனும் கலந்துரையாடுவதே இன்றைய தேவை.

இந்நிலையில், மற்றும் ஒன்றைய உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் மிகவும் கவனமாகவும், குறிக்கோள்களுடனும் செயல்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான ஊக்கத்தையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்தாலே போதும் அவர்கள் சாதனை படைப்பார்கள்!

-ரங்கராஜன் மகாலட்சுமி கிஷோர், தலைவர், வேல்டெக் கல்வி நிறுவனங்கள், சென்னை.

No comments:

Post a Comment