மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் பிளட் ஆன் 104. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செல்வாக கூடுதலாக ரூ. 100 தர வேண்டும். இந்தத் திட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜீவன் அம்ருத் சேவா என்றும் இதற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ரத்த வங்கி கால் சென்டர்
இந்த ரத்த வங்கிக்காக, தனியாக அனைத்து மாநிலங்களிலும் கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எண்தான் 104 ஆகும்.
மருத்துவமனைகளில்
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் இந்த 104 கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
ரத்தம் கோரி கால் செய்யலாம்
இந்த கால் சென்டர்களுக்குப் போன் செய்து தேவையான ரத்தம் குறித்த தகவலைக் குறிப்பிட்டால், உடனடியாக அருகில் உள்ள ரத்த வங்கிகளுக்கு இந்த கால் சென்டரிலிருந்து தொடர்பு கொண்டு, குறித்த முகவரிக்கு ரத்தம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வார்கள்.
24 மணி நேர சேவை
இது ஒரு 24 மணி நேர சேவையாகும். இந்த சேவையை 40 கிலோமீட்டருக்குள் இருப்பவர்கள் பயன்படுத்த முடியும். தகவல் தெரிவித்தவுடன் அடுத்த ஒரு மணி நேரத்தில் ரத்தம் நம்மைத் தேடி வந்து விடும்.
No comments:
Post a Comment