Pages

Thursday, September 25, 2014

கிராமப்புறத்தை சேர்ந்தவரா? சூப்பர் பாலிசி இருக்கிறது..

இன்சூரன்ஸ் பாலிசி என்றால் முதலில் நினைவுக்கு வருவது எல்..சி தான். அரசின் உத்தரவாதம் இருப்பது முக்கிய காரணம்.

தனியார் நிறுவனம் என்றால், 20 வருடம் கழித்து ஒரு நிறுவனம் இருக்குமா என்ற கேள்விக்குறியில் முதலீடு செய்வது தயக்கமாக இருக்கலாம்.


எல்..சி போல் அரசின் உத்தரவாதத்துடன், அரசினால் நடத்தப்படும், ஆனால் எல்..சியை விட ஒரு நல்ல காப்பீடு திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் தபால் நிலையங்கள் மூலம் நடத்தப்படுகிறது.

தபால் நிலையம் என்பதால் என்னவோ அவ்வளவாக விளம்பரம் தரப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். இணையத்தில் கூட அவ்வளவு தகவல்கள் இல்லை.

ஏற்கனவே "Postal Life Insurance" என்ற பெயரில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அஞ்சலகங்கள் மூலம் செயல்பட்டு வந்தது. இதில் முக்கியமான பலன் என்னவென்றால் எல்..சியை விட குறைவான பிரீமியம் தொகையும், இறுதியில் வழங்கப்படும் போனசும் அதிகமாக இருப்பது. அதாவது அரசும் தனது பங்கிற்கு சிறு தொகையினை அஞ்சலகம் மூலம் நமக்குத் தருகிறது.

முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் இருந்த இந்த பாலிசி 1993 முதல் பொதுமக்களுக்கும் விரிவாக்கப்பட்டது. அதில் ஒரு முக்கியமான நிபந்தனை அந்த அஞ்சலகம் கிராமப்புறத்தில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கான இந்த திட்டத்தின் பெயர் "Rural Postal Life Insurance"

இதனால் சென்னை, மதுரை போன்ற மாநகராட்சிகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது. இரண்டாம் நிலை நகராட்சிகளுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. உங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள்.
எப்படி பலன் கிடைக்கிறது? என்பதை உதாரணத்துடன் விளக்குகிறோம்.

நீங்கள் எல்..சியில் 20 வருட காலத்திற்கு ஒரு லட்சத்திற்கு பாலிசி எடுத்தால் மாதம் 442 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். ஆனால் அதே விதமான பாலிசிக்கு அஞ்சலகத்தில் 400 ரூபாய் பிரீமியம் கட்டினால் போதும். ஆக, பிரீமியத்தில் மட்டும் மாதம் 42 ரூபாய் சேமிக்கலாம்.

இதே போல் போனஸ் வருடத்திற்கு ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் அஞ்சலகத்தில் 70 ரூபாய் அளிக்கப்படுகிறது. இதனால் 20 வருடம் கழித்து ஒரு லட்ச ரூபாய் பாலிசிக்கு 2,40,000 ரூபாய் கிடைக்கும். அதாவது நாம் கட்டிய பிரீமியம் போக, நமக்கு கிடைத்த வருமானம் 1,44,000.

ஆனால், எல்..சியில் போனஸ் வருடத்திற்கு ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 42 ரூபாய் போனஸாக வழங்கப்படுகிறது. இறுதியில் Termilan Bonus என்று ஆயிரம் ரூபாய்க்கு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் ஒரு லட்ச ரூபாய் பாலிசியில் 20 வருடம் கழித்து 2,04,000 ரூபாய் கிடைக்கும். இதில் நாம் கட்டிய பிரீமியதைக் கழித்துக் கொண்டால் 98,000 ரூபாய் வருமானம்.

மேலோட்டமாக பார்த்தால்,

20
வருடங்கள் கழித்து ஒரு லட்ச ரூபாய்க்கு =>
அஞ்சலகக் காப்பீட்டில், கிடைத்த வருமானம் 1,44,000 ரூபாய்.
எல்..சியில் கிடைத்த வருமானம் 98,000 மட்டும்.

அஞ்சலகதில் ஒரு லட்ச ரூபாய் பாலிசியில் மட்டும் 46,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.

பாலிசி தொகை கூடும் போது இதை விட நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் அஞ்சலகத்தில் அதிகபட்சமாக மூன்று லட்சம் வரை மட்டுமே பாலிசி எடுக்க முடியும். எல்..சி யில் இப்படியொரு எல்லை இல்லை.

எல்..சி பாலிசி போல் வரி விலக்கு சலுகையும் பெற்றுக் கொள்ளலாம்.
பிரீமியம் கட்டுவதில் சிரமங்கள் ஒன்றும் இல்லை. அஞ்சலகத்திலும் முகவர்கள் உள்ளனர். அவர்கள் வீடு வந்து பிரீமியம் வாங்கி செல்கின்றனர்.

1 comment:

  1. பதிவு பயனுள்ளது. ஒரு முக்கியமான விஷயம்: இன்சூரன்ஸ் என்பது சேமிப்பது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப் படுகிறது. நூற்றுக்கு ஒருவருக்கே அந்த இன்சூரன்ஸ் காப்புறுதியாக பயனளிக்கக் கூடும். ஆனால் ஒருவரை மனதில் வைத்தே தீட்டப் படும். இது இன்சூரன்ஸ் அடிப்படை. வகுப்பறைப் பாடம் போன்று இருந்தால் மன்னிக்க.

    சொல்ல வந்தது இன்னொரு விஷயம்: அகால மரணம் அல்லது permanent disability ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகையைப் பெறுவது எளிதாக இருக்கிறதா? LIC ஐப் பொறுத்தவரை இழுத்தடிப்பார்கள் என்ற எண்ணம் நிலவியது; ஆனால் இப்போது மாறிவிட்டது; தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் செவ்வனே செயல் படுகின்றன; அஞ்சல் துறை நடத்தும் இந்தத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கான நடைமுறைகள், ஆவணங்கள், எடுத்துக் கொள்ளும் காலம் இவை பற்றியும் கண்டுகொள்ளவேண்டும். அனுபவம் உள்ள வாசகர்கள் இங்கு கூறலாமே! Nerkuppai Thumbi

    ReplyDelete