இப்பொ இருக்கிற காலகட்டத்தில் ஒருவர் மற்றவர்களிடம் கடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டினாலே அது பெரும் சாதனை. கடன் தருவதையே சிலர் தொழிலாகவும் செய்து வருகின்றனர். அவசரத்துக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கி பின் அதை செலுத்தமுடியாமல் பலர் தவிப்பார்கள். கடன் தொல்லை வட்டி தொல்லையால் தற்கொலை வரை சென்றவர்களும் உண்டு.
அதிக வட்டி விட்டு சம்பாதிப்பவர்கள், கடன் வாங்கியவர்களை துன்புறுத்துபவர்கள், இதுபோன்ற சம்பவங்களை கட்டுபடுத்த 24 மணி நேரமும் செயல்படகூடிய அவரச உதவிகால எண்ணை எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது. 044-25615086 இந்த உதவி எண் காவல் ஆணையரின் நேர் கட்டுபாட்டின் கீழ் கண்கானிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகவோ அல்லது அவர்களின் பகுதிக்குட்பட்ட காவல் நிலையம் மூலமாகவோ உதவப்படும்.
THANKS
ReplyDelete