Pages

Saturday, April 19, 2014

ஆன்லைனில் பொருள் வாங்குபவரா நீங்கள்? உஷார் தகவல்கள்...!

என்னால் தேடிச்சென்று கடை கடையாய் ஏறி இறங்கி பொருள்கல் வாங்க முடியாது, நான் ஆன்லைனில் தான் பொருள் வாங்குவேன் என்பவரா நீங்கள்? நீங்கள் பொருள் வாங்கும் போது என்னென்ன தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அதை எவ்வாறு எல்லாம் தவிர்க்கலாம் என்பது குறித்த ஐடியாக்கள் இதோ...
என்னென்ன தவறுகள் :
நீங்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்பவராக இருந்தால் நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் நம்பகத் தன்மையானது தானா? என சரிபார்த்து வாங்குங்கள். இல்லையெனில் உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.

நீங்கள் ஏதாவது ப்ரௌசிங் சென்டரில் இருந்து ஆர்டர் செய்பவராக இருந்தால் அங்கு ஸ்கிரீன் கேப்சரிங் தொழில்நுட்பமோ அல்லது சில மென்பொருட்களை பயன்படுத்தியோ உங்கள் பாஸ்வேர்டு அல்லது கிரெடிட் கார்டு தகவல்கள் திருடப்படலாம். கூடியவரையில் நீங்கள் ஆர்டர் செய்ய ப்ரௌசிங் சென்டர்களை தவிர்ப்பது நல்லது.

சில சமயம் மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது அதன் விதிமுறைகளை சரியாக படித்து பாருங்கள்...சில ஆப்ஸ்கள் உங்கள் தகவல்களை கன்சல்டன்ஸி நிறுவனங்களுக்கு விற்றுவிடும். மற்றும் உங்கள் பர்சனல் தகவல்களான மொபைல் நம்பர், இமெயில் ஐடி, கிரெடிட் கார்டு நம்பர் போன்ற தகவல்கள் இது போன்ற ஆப்ஸ்களால் பகிரப்பட வாய்ப்பு உள்ளது.

நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளத்திலோ அல்லது ஆப்ஸோ அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் ஒருமுறையாவது படித்துப் பாருங்கள். ஒருவேளை உங்கள் தகவல் திருடப்பட்டது என நீங்கள் வழக்கு தொடர்ந்தால் அதற்கு அவர்கள் நீங்கள் ஒத்துக்கொண்ட விதிமுறைகளை காரண்ம் காட்டி விடுவார்கள்.

எப்படி தவிர்க்கலாம்?:

1.
நீங்கள் பொருள் வாங்கும் இணையதளத்தில் இருக்கும் நிபந்தனைகள் விதிமுறைகளை படித்துவிட்டு அது திருப்திகரமானதாக இல்லையெனில் அந்த தளத்தில் ஆர்டர் செய்யாதீர்கள்.

2.
அவசியம் என்றால் மட்டும் ப்ரௌசிங் சென்டருக்கு சென்று ஆர்டர் செய்யுங்கள். அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றி விடுங்கள்.

3.
உங்கள் ப்ரௌசரில் கடையாக பயன்படுத்திய இணைய தளங்களின் பட்டியல், அதன் ஹிஸ்டரி பதிவில் இருக்கும். அதை டெலிட் செய்தால் உங்கள் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்டு நம்பர் ஆகியவை அழிக்கப்பட்டுவிடும்.

1 comment: