Pages

Tuesday, July 23, 2013

அல்சரை போக்கும் கீரை

கீரை இயற்கையின் பரிசு. தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என
மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரையில் வைட்டமின் கே, டி மற்றும் தாதுபொருட்கள் அடங்கியுள்ளன. கீரையில் அடங்கியுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல மூல ஆதாரமாக விளங்குகின்றது.. 

கீரை புற்றுநோய்கெதிரான மற்றும் அழற்சியை தடுக்கின்ற நோய்யெதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. குழந்தைகளுக்கு கீரைகளை கொடுத்து வளர்க்க  வேண்டும். கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமான பலன்களை தருகிறது. கீரை, காய்கறிகள், மற்றும் பழங்கள்  சேர்த்து கலந்து ஜீஸ் செய்து சாப்பிடலாம்.  

கீரையை ப்ரீசரில் வைத்தாலும் அதன் பலன் குறையாது. என்றாலும் கீரைகளை வாங்கிய நாட்களிலே சமையல் செய் சாப்பிட வேண்டும். கீரை  சாப்பிடுவதால் கண்களுக்கான பிரச்சனை எதுவும் ஏற்படாது மேலும் உடல் எலும்புகளை வலுவடையச் செய்கிறது. கீரை சாப்பிட்டால் செரிமானம்  சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கிறது. 

அல்சரால் அவதி படுகின்றவர்கள் கீரையை தினம் ஒரு வேளை உணவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் வயிறு சம்பந்தமான அனைத்து  பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தேர்வாக உள்ளது. பெருங்குடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. தோல் பராமரிப்பிற்கும் கீரை  உதவிகிறது. 

கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுபொருட்கள் அடங்கியுள்ளதால் உலர்ந்த, அரிப்பு ஏற்படுத்த கூடிய தோல்களை உடையவர்களுக்கு இது உடனடி  நிவாரணியாக செயல்படுகிறது. இதய நோய்களை தடுக்கிறது. அதாவது கீரையில் அடங்கியுள்ள வைட்டமின் மற்றும் சி ஆக்ஸிஜனேற்றத்தை  தடுத்து கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு ஹோமோசைஸ்டீன் ரசாயன மருந்தாக உள்ளது. கீரையில் அடங்கியுள்ள  கரோட்டின்  புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. கர்ப்பபை புற்றுநோயால் பாதிக்கபடுபவர்களுக்கு கீரை சிறந்த ரசாயன மருந்தாக  உதவுகிறது.

No comments:

Post a Comment