Pages

Thursday, July 25, 2013

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.
வைட்டமின் , சி, :
வைட்டமின் (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

ப்ரோபயாட்டிக்:
தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.

எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

துத்தநாகம்:
இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

மூலிகைகள்:
உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.
இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலை விட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டினும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனானசியாசான்தைன்மற்றும்லூட்டீன்ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றாலும், உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன.
தகவல்:ஆரோக்கியமான வாழ்வு 


Tuesday, July 23, 2013

அல்சரை போக்கும் கீரை

கீரை இயற்கையின் பரிசு. தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என
மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரையில் வைட்டமின் கே, டி மற்றும் தாதுபொருட்கள் அடங்கியுள்ளன. கீரையில் அடங்கியுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல மூல ஆதாரமாக விளங்குகின்றது.. 

கீரை புற்றுநோய்கெதிரான மற்றும் அழற்சியை தடுக்கின்ற நோய்யெதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. குழந்தைகளுக்கு கீரைகளை கொடுத்து வளர்க்க  வேண்டும். கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமான பலன்களை தருகிறது. கீரை, காய்கறிகள், மற்றும் பழங்கள்  சேர்த்து கலந்து ஜீஸ் செய்து சாப்பிடலாம்.  

கீரையை ப்ரீசரில் வைத்தாலும் அதன் பலன் குறையாது. என்றாலும் கீரைகளை வாங்கிய நாட்களிலே சமையல் செய் சாப்பிட வேண்டும். கீரை  சாப்பிடுவதால் கண்களுக்கான பிரச்சனை எதுவும் ஏற்படாது மேலும் உடல் எலும்புகளை வலுவடையச் செய்கிறது. கீரை சாப்பிட்டால் செரிமானம்  சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கிறது. 

அல்சரால் அவதி படுகின்றவர்கள் கீரையை தினம் ஒரு வேளை உணவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் வயிறு சம்பந்தமான அனைத்து  பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தேர்வாக உள்ளது. பெருங்குடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. தோல் பராமரிப்பிற்கும் கீரை  உதவிகிறது. 

கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுபொருட்கள் அடங்கியுள்ளதால் உலர்ந்த, அரிப்பு ஏற்படுத்த கூடிய தோல்களை உடையவர்களுக்கு இது உடனடி  நிவாரணியாக செயல்படுகிறது. இதய நோய்களை தடுக்கிறது. அதாவது கீரையில் அடங்கியுள்ள வைட்டமின் மற்றும் சி ஆக்ஸிஜனேற்றத்தை  தடுத்து கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு ஹோமோசைஸ்டீன் ரசாயன மருந்தாக உள்ளது. கீரையில் அடங்கியுள்ள  கரோட்டின்  புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. கர்ப்பபை புற்றுநோயால் பாதிக்கபடுபவர்களுக்கு கீரை சிறந்த ரசாயன மருந்தாக  உதவுகிறது.

Monday, July 22, 2013

வாழைப்பூ:-

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்குபிவிற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.

வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.

குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று.

வாழைப்பூ-மருத்துவக் குணங்கள் :-

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.