Pages

Sunday, June 16, 2013

விரதம் இருக்கிறீர்களா? இதப்படிங்க முதல்ல...!

கடவுளுக்காக விரதம் இருக்கிறவங்களும், உடல் எடையை குறைக்கணும்ன்னு விரதம் இருக்கிறவங்களும் பட்டினி கிடந்தாலோ, குறைவா சாப்பிட்டாலோ அது சாத்தியமாகும்ன்னு நினைக்கின்றனரே தவிர, கலோரி குறைவான உணவை சாப்பிடணும்ன்னு தெரிஞ்சுக்கிறதில்லை. சாப்பாடு மூலமா பாசத்தைக்காட்ட நினைக்கிற மக்கள் இந்தியாவில் அதிகம். கல்யாணம், காதுகுத்தல்ன்னு எந்த விசேஷமானாலும் விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். விரதங்கிறது வெறுமனே சாப்பாட்டை தவிர்க்கிற விஷயம் இல்லை. வயிறோடு சேர்த்து மனஉணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்கிறது தான் முறையான விரதம். ஒரு பக்கம் விரதம்ன்னு சொல்லி,வெளி வேலைகளை வச்சுக்கிட்டுஅலையறது மற்றும் டிவிபார்க்கிறது மாதிரியான வேலைகளைச் செய்யறது ரொம்ப தப்பு. அதுஎதிர் மறையான பலன்களைத்தான் தரும்
விரதமிருக்க முடிவு செய்கிறவர்கள், முதலில் மருத்துவரை கலந்தாலோசித்து, உடல்நலத்தை பரிசோதித்த பிறகு, எப்படி விரதமிருக்க வேண்டும் என்பதை தெரிந்து, விரதம் ஆரம்பிப்பதே சரியானது. வாரத்துல ஆறு நாள் கண்டதையும் சாப்பிடறோம். ஒரு நாள் சாப்பிடாம, ஒட்டுமொத்த இயக்கத்துக்கும்வெளியேறஇது உதவும். ஹெச்.டி.எல் என்ற நல்ல கொலஸ்ட்ராலோட உற்பத்தி அதிகமாகும். ஆனாலும்,யார் விரதம் இருக்கலாம்,யாருக்கு அது கூடாதுன்னு சில வரைமுறைகள் இருக்கு. அதன் படி கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்போர், ரத்த சோகை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளோர் விரதம் இருக்கக் கூடாது. விரதம் என்றால், காலையில் இருந்து ராத்திரி வரை ஒண்ணுமே சாப்பிடாம இருக்கிறதுன்னு அர்த்தமில்லை. ராத்திரி முழுக்க எதையுமே சாப்பிடாம இருக்கிறதால, காலையில் எனர்ஜி அளவுகம்மியா இருக்கும்

காலையில் எதுவும் சாப்பிடாம விரதத்தை தொடங்கறப்ப, அந்த எனர்ஜி இன்னும் குறையும். ஏற்கனவே வேற ஏதாவது சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு, இதனால், இன்னும் பிரச்னை அதிகமாகும். விரதமிருக்கிறதுன்னு முடிவு பண்றவங்க, காலை உணவை தவிர்க்கவே கூடாது. காலைலயும், மதியமும் சாப்பிடாம இருக்கிறதால், ராத்திரிஅதிகமா சாப்பிடுவோம் நம்மையும் அறியாமலேயே. எடையைகுறைக்கணும்ன்னு விரதம் இருக்கிறவங்களுக்கு இது நேரெதிராவேலை செய்து, உடல் எடையை கூட்டும். அதனால், உயரத்துக்கேற்றஎடை, ஆரோக்கியம், சரி விகித சாப்பாடு உடற்பயிற்சி,யோகா செய்யறவங்க மட்டுந்தான் விரதம் இருக்க தகுதியானவங்க. விரதத்தை முடிக்கிற போது,நாள் முழுக்க பட்டினி இருந்ததுக்கெல்லாம் சேர்த்து, ஒரு பிடி பிடிக்கிறது தப்பு. முதல்ல கொஞ்சமா ஏதாவது உணவு, கொஞ்சம் ஜூஸ் எடுத்துக்கிட்டு, அப்புறமா வழக்கம் போல சாப்பிடலாம். தினசரி பயன்படுத்துகிற, டூவீலரோ, காரோ மக்கர் செய்யாமல் தொடர்ந்து இயங்க, குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை சர்வீஸ் செய்கிறோம். உடலும் அதன் இயக்கமும் கூட அப்படித்தான். இயக்கத்தை சுத்தம் செய்து, ஓய்வு கொடுக்கிற அற்புதமான விஷயமே விரதம். மேற்சொன்ன தகவல்களை நினைவில் கொண்டு விரதம் தொடங்குவதும், தொடர்வதும் பாதுகாப்பானது!

No comments:

Post a Comment