Pages

Wednesday, July 30, 2014

கொய்யா! பழங்கள்!! பலன்கள்!!!

குறைந்த விலையில் கிடைப்பதால், 'ஏழைகளின் ஆப்பிள்என்று அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தும். இதனால் குடலில் நச்சுக்கள் சேருவது தவிர்க்கப்பட்டு, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைகிறது.
100
கிராம் கொய்யாவில் 228 மி.கி வைட்டமின் சி உள்ளது.
இது ஒரு நாள் தேவையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். அதிக அளவில் வைட்டமின் சி எடுத்துக் கொள்வது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் நோய் கிருமித் தொற்று, சில வகையான புற்றுநோய்த் தாக்குதலில் இருந்து உடலைக் காக்கிறது. மேலும் ரத்தக் குழாய்கள், எலும்பு, தோல், உடல் உள் உறுப்புக்கள் போன்ற உறுப்புக்களின் அடிப்படைக் கட்டமைப்பு புரதமான கொலாஜன் சேர்க்கைக்கு அவசியமாக இருக்கிறது.
வைட்டமின் சி-யைத் தவிர வைட்டமின் -வும் இதில் நிறைவாக இருப்பதால், கண், தோல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. வாழைப் பழத்தைப்போலவே இதிலும் பொட்டாசியம் நிறைவாக உள்ளது. பொட்டாசியமானது செல்களின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்கும், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் மிகவும் அவசியம்.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு மிகவும் பாதுகாப்பான உணவு. சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக செயல் இழப்பு, இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்

Saturday, July 26, 2014

மனிதன் விட வேண்டிய 21 தீய குணங்கள்

மனிதன் அன்றாட வாழ்வில் 21 தீய குணங்களை கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்று கூறுகின்றனர். அவை


1.தற்பெருமை கொள்ளுதல்
2.
பிறரைக் கொடுமை செய்தல்
3.
கோபப்படுதல்
4.
பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
5.
பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6.
பொய் பேசுதல்
7.
கெட்ட சொற்களைப் பேசுதல்
8.
நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9.
புறம்பேசுதல்
10.
தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11.
பாரபட்சமாக நடத்தல்
12.
பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
13.
பொய்சாட்சி கூறுதல்
14.
எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15.
வாக்குறுதியை மீறுதல்
16.
சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17.
குறை கூறுதல்
18.
வதந்தி பரப்புதல்
19.
கோள் சொல்லுதல்
20.
பொறாமைப்படுதல்
21.
பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்.


Tuesday, July 22, 2014

உங்கள் மொபைல் போன்களுக்கான சேவை

மொபைல் போன்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், டாட்டா டோகோமோ, ரிலையன்ஸ் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் கட்டணத்திருட்டுக்கு முடிவு கிடைத்துள்ளது. இது சாத்தியமாமேற்படி அனைத்து நிறுவனங்களும் நமக்கு தெரியாமலே, நமக்கு தேவையே இல்லாத ஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட் செய்துவிடுவார்கள். தினசரி 2 ரூபாய், 5 ரூபாயென பிச்சையெடுக்காததுதான் குறை!
இது தொடர்பாக பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் குவியவே, ‘ட்ராய்இதற்கு முழுப்பொறுப்பேற்று விடையும் கொண்டுள்ளது. இனிமேல் இந்த அடாவடி திருட்டுகளை நிறுத்த நீங்கள் 155223 என்ற எண்னை பயன்படுத்துங்கள்.

இந்த எண்னானது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொதுவானதே! இதன் மூலமாக உங்களுக்கு தேவையில்லாத அனைத்து சேவைகளையும் நிறுத்த முடியும். இதனால் உங்களுடைய பணம் திருடப்படாது என்பது ட்ராயின் கருத்து!

Friday, July 18, 2014

புரோட்டா தான் உங்களுக்கு பிடித்த உணவா?

இணையத்தில் பரவிய பதிவு : வாசகர்களின் பார்வைக்காக....
புரோட்டா தான் உங்களுக்கு பிடித்த உணவா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
அப்படியென்றால் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது புரோட்டா கடை, அந்த
புரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும்
எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும்
உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம்
உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட
உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில்
இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக
பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல மைதாவில் நார் சத்து கிடையாது, நார்
சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும் இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,
மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய
தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும்
சமர்ப்பித்துள்ளனர். இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய
உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .