இன்றைய நிலையில் ஸ்மார்ட்போன்கள் மனித வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டன. ஒருவரைத் தொடர்புகொள்வதற்கு மட்டும்தான் செல்பேசி என்ற நிலை மாறி, இன்று ஸ்மார்ட் போன்கள், கேமரா, மடிக்கணினியின் பணிகளையும் செய்வதால் மக்களைக் கவர்ந்து வருகின்றன. மக்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போலக் குறைந்த விலைக்கு நிறைந்த சேவைகளுடன் ஸ்மார்ட்போன்களைப் போட்டிப் போட்டுக்கொண்டு மொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும் 'ஆப்ஸ்’ என்று சொல்லப்படும் அப்ளிகேஷன்கள் ஏராளம். அதில் அனைவருக்கும் பயன் தருவது 'ஃபைனான்ஷியல் ஆப்ஸ்’கள்.
இந்த 'ஃபைனான்ஷியல் ஆப்ஸ்’கள் ஒவ்வொருவரின் வரவு செலவு மற்றும் சேமிப்பு விவரங்களை உள்வாங்கிக்கொண்டு அதை வரைபடங்களுடன் சரியான விகிதத்தில் வெளிப்படுத்துகின்றன. தினமும் ஏதேதோ செலவு செய்துவிட்டு, எதற்காகச் செலவு செய்தோம் என்பது தெரியாமல் தவிப்பவர்களுக்கு இவை மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த 'ஃபைனான்ஷியல் ஆப்ஸ்’களின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
சிறப்பம்சங்கள்!
ஒருவர் தினமும் செய்யும் செலவுகளை இந்த ஆப்ஸில் குறித்துவிடுவதால், எதற்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்பதைத் துல்லியமாகக் காட்டிவிடும். இதனால், தேவையில்லாத செலவுகளைக் குறைத்துச் சிக்கனத்தை அதிகப்படுத்த முடியும்.
இந்த ஆப்ஸ்களில் பல நாடுகளின் ரூபாய் மதிப்பீடு வசதி இருப்பதால், வசதிக்கு ஏற்றாற்போல அவரவர்களின் வரவு, செலவுச் சேமிப்புக் கணக்குகளின் மதிப்பைக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.
ஏற்கெனவே செய்துவரும் வரவு செலவுக் கணக்குகள்போக, புதிய கணக்குகளைத் துவங்கி அதுபற்றிய விவரங்களையும் இதில் பதிந்துவைக்க முடியும். வாரத்துக்கு, மாதத்துக்கு, வருடத்துக்கு ஒருமுறை எனத் தங்களின் விவரக் கணக்குகளைக் காலநிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும்.
ஏற்கெனவே உள்ள கணக்குகள், தேவையில்லை என்று நினைத்தால் அதை அழித்துப் பிற்பாடு புதிய கணக்குகளைத் தொடங்கும் வசதியும் இதில் உள்ளது.
பிறர் உங்களின் வரவு, செலவு விவரங்களை எடுத்துப் பார்க்காதபடி பாஸ்வேர்டு லாக் வசதியும் இதில் உள்ளது.
இலவசமாகக் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன்களை மிக எளிதாகப் பயன்படுத்தலாம்.
இதில் பதிவு செய்திருக்கும் வரவு செலவு சேமிப்பு விவரங்களைக் கூகுள் டிரைவில் பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ள முடியும். தேவைப்படும்போது ப்ரின்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.
எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Expense Manager)
மணி லவ்வர் - எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Money Lover - Expense Manager)
ஃபைனான்ஷிஸ்டோ - எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Financisto - Expense Manager)
ஈஸி பட்ஜெட் - எக்ஸ்பென்ஸ் ட்ராக்கர் (Easy budget expense tracker)
மணி லவ்வர் - எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Money Lover - Expense Manager)
ஃபைனான்ஷிஸ்டோ - எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Financisto - Expense Manager)
ஈஸி பட்ஜெட் - எக்ஸ்பென்ஸ் ட்ராக்கர் (Easy budget expense tracker)
இந்த ஐந்து ஆப்ஸ்களில் முதலாவதும், ஐந்தாவதுமாக இருக்கிற ஆப்ஸ்கள் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். நடுவில் இருக்கிற மூன்று ஆப்ஸ்கள் 5 லட்சம் முதல் 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்
செலவு எப்படி ஆகுதுன்னே தெரியலை என்று புலம்புகிறவர்கள், முதலில் இந்த ஆப்ஸ்களைப் பயன்படுத்தத் தொடங்கலாமே!