Pages

Monday, October 21, 2013

வெற்றிக்கு வழி

1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.

2.
வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.

3.
வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.

4.
வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.

5.
ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது,
மற்றொன்று நாமே ஏறுவது.

6.
வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.

7.
பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.

8.
முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.

9.
பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.

10.
வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.

Tuesday, October 15, 2013

உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்புகள்

* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
*
தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.
*
உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.
*
முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
*
தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.
*
குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.
*
படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு போத்தல் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.
*
முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.
*
கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.
*
உறங்கும் போது பட்டு துணிகளை அணியுங்கள்.
*
அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
*
இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.
*
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
*
கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.
*
தினமும் காலையில் தேநீரோ, குழம்பியோ( காபி)குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
*
தினமும் காலை யில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி

தினமும் அரிசி சமையல் மட்டும் போதுமா?

அரிசி: அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என பலவகைகள் உள்ளன.. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அதை அப்படியே  பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து இடித்து பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது, கொழுப்பு சத்தை அதிகமாக்கும்  தன்மை கொண்டது. இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள்  பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
 
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லதுபசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பாகோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

பார்லிகுழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. இதை நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். பார்லியை கஞ்சியாக  காய்ச்சி குடிக்கலாம். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும் தன்மை கொண்டது.. உடல் வறட்சியை போக்க  க்கூடியது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும்எலும்புகளுக்கு உறுதி தரும்.

கோதுமை: அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர்எண்ணெய், நெய் விடாமல் சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும். கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்புபாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்மலச்சிக்கல் உண்டாகாது.

கேழ்வரகு: தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும்  இருக்கின்றன. கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை  கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

வரகு: நவதானிய வகைகளில் வரகும் ஒன்று. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியதுமாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

சாமை: சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின்  விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

கம்பு: இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும். கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற  தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை  சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.

சோளம்: சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க  வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும்.